எனது உலகம்
பூக்கள் மட்டுமே நிறைந்த எனது உலகத்தில்
சில நேரம் புயலடித்து ஓய்ந்திருக்கும் !
அந்நேரங்களில் பூக்கள் சிதறி மடிந்திருக்கும்
சில பூக்கள் குற்றுயிரில் முனகலை
மட்டுமே மொழியாக்கி இருக்கும்- நான்
ஒவ்வொரு பூக்களாக ஆறுதல் சொல்லி
அமைதிப்படுத்தி முடிப்பதற்குள் அடுத்த
புயல் ஆரம்பித்திருக்கும் ..................
இப்போதெல்லாம் புயல் எனது வாழ்கையில்
பூக்கள் பூப்பதற்கு அனுமதிப்பதேயில்லை...
பூக்கள் மட்டுமே நிறைந்த எனது உலகத்தில்
சில நேரம் புயலடித்து ஓய்ந்திருக்கும் !
அந்நேரங்களில் பூக்கள் சிதறி மடிந்திருக்கும்
சில பூக்கள் குற்றுயிரில் முனகலை
மட்டுமே மொழியாக்கி இருக்கும்- நான்
ஒவ்வொரு பூக்களாக ஆறுதல் சொல்லி
அமைதிப்படுத்தி முடிப்பதற்குள் அடுத்த
புயல் ஆரம்பித்திருக்கும் ..................
இப்போதெல்லாம் புயல் எனது வாழ்கையில்
பூக்கள் பூப்பதற்கு அனுமதிப்பதேயில்லை...