Sunday, January 24, 2016

எப்போதோ நான் தொலைத்த கடிகாரம்
அடிகடி என் கனவில் கண்சிமிட்டி செல்கிறது
தொலைத்த அதே இடத்தில சற்றும் அசையாமல் 
எடுக்க நான் குனியும் போதெல்லாம்
வேப்பு காட்டி மறைந்து விடுவது அதன் பழக்கம்,
தொலைத்த நேரத்தை சரியாக சொன்னால்
என்னிடம் வர சம்மதம் தெரிவித்தது
கனவில் கண்விழித்து கடிகாரத்தை
உறுத்த போது கடிகாரமுள் சற்றும் அசையாமல்
நின்று விட்டிருந்தது நான் தொலைத்த மணித்துளியில்
காலம் நான் தொலைத்த இடத்திலா - அல்லது
காலத்தை தொலைத்த இடத்தில நானா ???