Friday, December 6, 2013

                               எனது உலகம்

பூக்கள் மட்டுமே  நிறைந்த எனது உலகத்தில்
சில நேரம் புயலடித்து ஓய்ந்திருக்கும் !
அந்நேரங்களில் பூக்கள் சிதறி  மடிந்திருக்கும்
சில பூக்கள் குற்றுயிரில் முனகலை
மட்டுமே மொழியாக்கி இருக்கும்- நான்
ஒவ்வொரு  பூக்களாக ஆறுதல் சொல்லி
அமைதிப்படுத்தி முடிப்பதற்குள் அடுத்த
புயல் ஆரம்பித்திருக்கும் ..................
இப்போதெல்லாம் புயல் எனது வாழ்கையில்
பூக்கள் பூப்பதற்கு அனுமதிப்பதேயில்லை...

                     

Friday, June 7, 2013

கண்ணில் இருந்து கடைசி துளியும்
 கரைந்து விழுந்து விட்டது  
இன்னும் தான் எனக்கு புரியவில்லை
எதற்காக அழுகிறேன் என்று


Friday, March 1, 2013


வாதங்களிட்கும் பிரதிவாதங்களிட்கும் 
இடையே தொலைந்து போகின்றன - தனி மனித
எண்ணங்களும் கொள்கைகளும் ...