Thursday, August 18, 2011

கணப்பொழுது   மௌனங்களில்   
தோன்றி  மறைகின்றன  
ஆயிரமாயிரம்  எண்ணங்கள் 

மறக்கவோ  மறுக்கவோ  முடியவில்லை 
நான்  கடந்து  வந்த  பாதையையும் 
அனுபவித்த  சோகங்களையும் 


கவலைகள்  நீளமானாலும்  
காலவோட்டத்தில்  கரைந்து 
காணாமல்  போகுமாமே  

ஆனால்  அந்த  மோசமான 
தருணங்களை  நொடிப்பொழுதில் 
தாங்கக்கூட  முடிவதில்லை 


விரக்தியின்  விளிம்பில் 
காயமற்ற  இடங்கள்  கூட 
ரணமாய்  வலிக்கின்றனவே ....