Saturday, March 17, 2012

 உறக்கத்தில் உயிர் பெற்றெழும்
            கனவுகளாய் ஆயிரமாயிரம் நினைவுகள்
நினைவுக்கும் நிஜத்திற்கும் இடையே 
          சலனமற்ற போர் சத்தமின்றி நடக்கிறது 


தூக்கி எறியப்படும் குப்பை போல சிலநாள் 
        பாராட்டி வாழ்த்தி பட்டம் தந்து சிலநாள்
மொத்தத்தில் காற்றில் ஆடும் சருகை போல 
         வாழ்க்கையும் அங்குமிங்கும் அலைந்து போகிறது 














Sunday, March 11, 2012

பிறருக்காக கரைந்து கொண்டிருந்த
மெழுகுதிரி மௌனமாக அழுதது- தனக்காக
கருகிய தீக்குச்சியை நினைத்து