Friday, August 21, 2015

மனதில் இருக்கும் வலிகள் 
அதிகம் ஆனதால் - இப்போதெல்லாம்
காயங்களில் தோன்றும் வலிகள் 
என்னவோ வலிப்பதேயில்லை


Saturday, June 13, 2015

நிசப்தமான இரவுகளில்
நான் கடந்து வந்த பாதையை
மீட்டி பார்த்து கொள்கிறேன்

நினைத்து பார்த்து
பெருமை பட்டு கொள்ள
அவை ஒன்றும் வெற்றிகளை
மட்டுமே தந்தவையல்ல

பாதையில் முட்கள் இருக்கும்
என்றோ - நான் அதில் பயணிப்பேன்
என்றோ ஒரு நாளும் - நினைத்து
பார்த்ததில்லை  நான்

இப்போதெல்லாம் என் பாதைகளில்
மலர்கள் தூவப்படுவதும்  இல்லை
சின்ன சின்ன சந்தோசங்களும்
இல்லை

மாறாக என் வாழ்க்கை
முட்களில் பயணித்தே
காயம் பட்டு கொள்கிறது - என் இரவு
உறக்கம் கூட முட் படுக்கையில் தான்



Thursday, June 11, 2015

எங்கேயோ கேட்கும் பட்டாசு வெடிசத்தம்
எப்போதோ கேட்ட குண்டுவெடிப்பு சத்தத்தை
நினைவுபடுத்தி செல்ல தவறுவதில்லை ....

இனி குண்டேவெடிக்காது என்று தலையில்
சத்தியம் செய்தாலும் , வெறும் இடிமுழக்கம்
கூட இதயத்தை ஒருகணம் நிறுத்தி விடுகிறது 




Thursday, January 15, 2015

நான் சந்தித்த மனிதர்களும் என்னை சந்தித்த மனிதர்களும்

வாழ்க்கை விசித்திரமானது தான் 
கூடவே மனிதர்களும் - 

முன்னால் நின்று தட்டி கொடுத்து
பன்னால் சென்று வாரி விட்டு
போலி முகம் காட்டும் மனிதர் சிலர்

போரினில் புற முதுகிட்டோடி 
மனையில் மார் தட்டி கொள்ளும் 
மன்னரை போல் சில மூடர் 

என்னிடம் பிறர் கவி பாடி 
பிறரிடம் என் கவி பாடி 
காரியம் பெறும் சில காரியவாதிகள்

தன் காரியம் பெற மட்டும் 
தொலைபேசியில் சிணுங்கும் 
சில நட்பு வட்டங்கள்

எல்லோருக்கும் புன்னகையை 
மட்டும் பரிசளித்து விட்டு
மனதிற்குள் வாய் விட்டு 
சிரித்து கொள்கிறேன்