முட்களில் மோதி மோதியே தினம் தினம்
உடைந்து போகின்றன கனவுகள்
கண்களில் இருந்து உடைந்து விழுகின்றது
இறுதியாக இருந்த கண்ணீர் துளியும்
சேமித்து வைத்த கடுகளவு நம்பிக்கையும்
கலைந்து காற்றில் கலந்து விட்டது
இருந்தும் எனது பயணம் தொடர்கிறது
பூதம் உமிழ்ந்து விட்ட வெளியில்
இல்லாத இலக்கை நோக்கி................ !
No comments:
Post a Comment