வெண்பனி மூடிய வீதிகள்
பச்சையமிழந்த மரங்கள்
தாம் துளிர்விடுவோம் என்ற
நம்பிக்கையில் இன்னமும்
கையசைத்து மகிழ்கின்றன
உதிர்வதும் தழைப்பதும்
மறுக்க முடியாதென்றாலும்
பழங்கதை பேசி மகிழ
கொஞ்ச பழுத்தல்களாவது
மிச்சமிருந்திருக்கலாம்
இறைவனின் படைப்பில் தான்
எத்தனை பாகுபாடு
சஹாராவில் வீசும் வெப்பத்தை
இங்கும் கொஞ்சம் தந்திருக்கலாம்
ஏனோ இந்த கஞ்சத்தனம்
வசந்த காலம் ஆரம்பம் என்று
யாரோ சொல்லியதை நம்பி
குதூகலத்துடன் புறப்பட்டேன்
நெற்றியில் சில்லென விழுந்தது
வானம் தூவிய பனிதுளி...........
மறுக்க முடியாதென்றாலும்
பழங்கதை பேசி மகிழ
கொஞ்ச பழுத்தல்களாவது
மிச்சமிருந்திருக்கலாம்
இறைவனின் படைப்பில் தான்
எத்தனை பாகுபாடு
சஹாராவில் வீசும் வெப்பத்தை
இங்கும் கொஞ்சம் தந்திருக்கலாம்
ஏனோ இந்த கஞ்சத்தனம்
வசந்த காலம் ஆரம்பம் என்று
யாரோ சொல்லியதை நம்பி
குதூகலத்துடன் புறப்பட்டேன்
நெற்றியில் சில்லென விழுந்தது
வானம் தூவிய பனிதுளி...........
அகல்

No comments:
Post a Comment