Thursday, June 30, 2011

மௌனம்

கணப்பொழுது மௌனங்களில் 
தோன்றி மறைகின்றன
ஆயிரமாயிரம் எண்ணங்கள் 


மறுக்கவோ மறக்கவோ
முடியவில்லை - நான்
கடந்து வந்த பாதையையும் 
அனுபவித்த சோகங்களையும் 


கவலைகள் நீளமானாலும்
காலவோட்டத்தில் கரைந்து 
போய்விடுமாம் - ஆனால்


அந்த கணங்களில்-அவற்றை
தாங்க கூட முடிவதில்லை
காயமில்லா இடங்கள் கூட
ரணமாய் வலிக்கின்றனவே...........
                                                                              


No comments:

Post a Comment