கண்ணீர்
தினம் தினம் தெளிவாய்
கலங்குகின்றன
என் கண்கள்
தெரிந்த முகங்களை
கூட தெரிந்தே
தொலைக்கிறேன்
உலகம் என்னை
மட்டும் விட்டு
சுழல்வது போல்
ஒரு பிரம்மை
மறந்து தொலைக்க
வழியும் இல்லை
நினைத்து பார்க்கவும்
தோன்றவில்லை
கோபத்தின் உச்சம்
கண்ணீர் என்றால்
கண்ணீரின் உச்சம்
மௌனம் தானோ???
No comments:
Post a Comment