Monday, June 20, 2011

kana kanum kalangal

வழமையான கதை களத்திலிருந்து மாறுபட்ட   நாம் மறந்த, தொலைத்த  நமது பள்ளி கால நினைவுகளை, கல்லூரி நினைவுகளை மீட்டி பார்க்கும் அழகிய கவிதை.  நம் ஒவ் வொருவரிலும் உள்ள குணங்களை பிரதிபலிக்கும் பாத்திரங்கள். நட்புக்கு இலக்கணமான நண்பர்கள், மலரும் காதல்கள், சின்ன சின்ன சண்டைகள் என தனக்கே உரிய பாணியில் பயணிக்கின்றது  கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை. asal college of engineering இன் முதலாம்,இரண்டாம் ஆண்டு மாணவர்களான வெற்றி,கார்த்திக், பாலா, காத்தாடி,அசோக்,சரவணன்,அப்பு,ஜக்கு,பாண்டி,பாலாஜி, மதன்,வாசு,இன்பா, ஹரிப்ரியா,ஸ்வேதா,திவ்யா,ஜெயா, தமிழ்,சந்தியா,மித்ரா,ரஜினி என ஒவொருவரும் எம்மோடு பழகிய நண்பர்களை நினைவூட்டுகிறார்கள். பாலா,காத்தாடி, ஜக்கு, பாண்டி செய்யும் நகைச்சுவை ரசிப்பு. கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை vijay  t.v யில் தினமும் இரவு 7 PM இற்கு ஒளிபரப்பாகின்றது.

No comments:

Post a Comment